முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.1000 நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். இவ்வாசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கோல்டு திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து வகை ஆசிரியர்களில் 106985ல் மூன்றாக பிரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இத்தொகையை தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.