fbpx

வரும் 15-ம் தேதி வரை பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

வரும் 15-ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13,14, 15 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பறிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும் நாளையும், குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்‌ பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்துலும்‌ இடையிடையே 65 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை, லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப்‌
பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஒரே நேரத்தில் இரண்டு பேர் கேக்குதா? பெண்ணின் கழுத்தை நெறித்து கொன்ற காதலன்...!

Mon Jul 11 , 2022
கா்நாடக மாநிலத்தில் காதலித்த பெண்ணை சந்தேகப்பட்டு தூக்கிட்டு கொலை செய்த இளைஞா் கைது. கர்நாடக மாநிலம் தாா்வாா் மாவட்டத்தை உள்ள பா்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முனிா் மகா தேஷ் (28). இவர் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மரியவாடா கிராமத்தைச் சேர்ந்த சோபனா என்றப் பெண் அவருடன் ஒன்றாக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாக வேலை செய்யும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. […]

You May Like