ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது ரூ.500 நோட்டுகளே பெரும்பாலான நேரங்களில் கிடைக்கிறது, ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை இதனால் சாமானிய மக்கள் அவதி பட்டு வந்துள்ளனர். இதற்கு RBI தற்போது தீர்வு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் மட்டுமே அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏடிஎம்களில் இருந்து ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளைப் பெற முடியவில்லை என்பது சாமானிய மக்களின் பொதுவான புகாராக உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு ரூ.100 அல்லது ரூ.200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி(RBI), இனி அனைத்து ஏடிஎம்களிழும் ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டது. மேலும் வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOக்கள்) இந்த உத்தரவை படிப்படியாக செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOக்கள்) தங்கள் ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, செப்டம்பர் 30, 2025க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் (தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்) 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Read More: அப்துல் கலாமின் தனிப்பட்ட கடிதங்கள் & ஆவணங்களை கையகப்படுத்தும் மத்திய அரசு…!