மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.75 கோடி கடன் தள்ளுபடி தயார் நிலையில் உள்ளது. அது விரைவில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 20 சதவீதம் விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர். என தெரிவித்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் நிவாரணம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.