fbpx

இளைஞர்களுக்கு குட்நியூஸ்!… இந்த ஆண்டு அதிக வேலைவாய்ப்பு அறிவிக்கப்படும்!… மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

பிப்.3ம் தேதி வெளியிடப்பட்டுள்ள ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு இந்த ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஆண்டு காலாண்டர் பிப்.3ல் வெளியிடப்பட்டது. அதில் இந்த ஆண்டு நடத்த உள்ள ரயில்வே தேர்வு பட்டியல் இடம் பெற்று உள்ளது. இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வே தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழில்நுட்ப பதவிகளுக்கான ஆட்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை, ரயில்வேயில் இளநிலைப் பொறியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் சேர விரும்புபவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள். நிலை 1 பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆண்டுக்கு நான்கு முறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Kokila

Next Post

பரபரப்பு...! திருப்பூரில் ED அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை...!

Tue Feb 6 , 2024
திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரி அங்குராஜ் என்பவரின் வீட்டில் ரூ.1.69 கோடி கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.88.66 லட்சம் பணம், 3 கார் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்த […]

You May Like