அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக ஆண்டுக்கு இருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 42% அகவிலைப்படியை பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வானது நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த விகிதமானது மாதத்தின் இறுதியில் வெளியிடப்படும். இவற்றின் சராசரி அளவை கணக்கிட்டு 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என பெரிய பண்டிகைகள் வருகின்றன.
இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, பண்டிகைகளுக்கு முன்பாக அதாவது செப்டம்பர் இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படியை பரிசாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். அதேசமயம் புதிய அகவிலைப்படியுடன் அக்டோபர் மாத சம்பளம் அதிகரிக்கலாம்.