fbpx

இளைஞர்களே குட்நியூஸ்!. வந்தாச்சு PM Internship திட்டம்!. விண்ணப்பிப்பது எப்படி?

‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்’ – கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த இந்த திட்டம் கடந்த 3ம் தேதிம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு டாப் 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, 2024-25 நிதியாண்டில் 1.25 லட்ச இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா, மேக்ஸ் லைஃப், அலெம்பிக் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட 500 முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதனால், நிறுவனங்களில் நேரடி செயல்பாடுகள் மற்றும் பணி அனுபவத்தை மாணவர்கள் பெறமுடியும். வேலைக்கு தேவையான திறன்களை பயிற்சி காலத்தில் மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இத்திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாணவர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும். பள்ளி படிப்பை முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பாலிடெக்னிக், டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது. அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அதே போன்று, IITs, IIMs, தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. CA/CMA முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ.5000 மாதம் வழங்கப்படும். இதில் ரூ.4,500 அரசு தரப்பில் இருந்து, ரூ.500 நிறுவனம் மூலமாகவும் அளிக்கப்படும். கூடுதலாக ரூ.6,000 ஒரு முறை மட்டும் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 12 மாதங்கள் அதாவது 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடி பணி அனுபவம் பெறும் படி பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கான பணி திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். பயிற்சி காலம் முடிந்த பின்னர் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் http://www.pminternship.mca.gov.in/ என்ற இணைய முகவரியில் வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் பதிவு செய்யலாம். தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Readmore: உஷார்!. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம்!. அறிகுறிகள் இதோ!.

English Summary

Good news guys! PM Internship Program has arrived!. How to apply?

Kokila

Next Post

ஷாக்!. சானிட்டரி பேட்களும் புற்றுநோயை உண்டாக்குமா?. ஆய்வில் வெளியான தகவல்!

Sun Oct 6 , 2024
These sanitary napkins contain chemicals that cause cancer, according to the laboratory test
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like