Cylinder safety: வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பாட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப சிலிண்டர்கள் உருவாக்கபடுகின்றன. இருப்பினும், எவ்வளவுதான் பாதுகாப்பாக கையாண்டாலும்கூட, சிலசமயங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து உயிரையே பறித்துவிடுகின்றன.
எல்லா சிலிண்டர்களுமே குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும். புதிய சிலிண்டர் 10 ஆண்டுகள் கழித்து பரிசோதிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பரிசோதிக்கப்படும். சிலிண்டர்களை நிரப்பும் ஆலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களால் சிலிண்டர்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதிக்கப்பட்டபின் அடுத்த சோதனைக்கான தேதி ஒட்டப்பட்டு சிலிண்டர் அனுப்பிவைக்கப்படும். இதை ஏஜென்சி ஊழியர்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்தனர்; 200 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
இந்த நிலையில், தற்போது சமையல் காஸ் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. இனி, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே சோதனை செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.
விவரங்களை, ஊழியர் தன் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின், வாடிக்கையாளரின் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, ஒ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண் வரும். இதற்கு பின், சோதனை முழுமை பெறும். இந்த சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
Readmore: மக்களே அலர்ட்…! இந்த 67 மருந்தை பயன்படுத்த வேண்டாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!