fbpx

பெண்களே குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை உயர்வதும், பின்பு குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது..

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.45,720க்கு விற்பனை செய்யப்பட்டது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ரூ.560 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

தமிழக மக்களுக்கு செந்தில் பாலாஜி சொன்ன குட் நியூஸ்…..! இனி கோடை காலத்தில் நோ பவர் கட்…..!

Sat Apr 15 , 2023
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் மிகப்பெரிய அதிருப்த்தியில் இருந்தனர். அதன் விளைவாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி 10 ஆண்டுகள் நீடித்தது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் 2011 ஆம் […]

You May Like