ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டு வருகின்றது.
மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும், விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையிலும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில், விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் அந்த துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ”மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்கும் வகையில், நிலுவையில் உள்ள அவர்களின் 4,200 புகார்களுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையின் கீழ் புதன்கிழமை வரை 18 நாட்களில் 3,080 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.