PMAY urban project: ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம். நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில், அவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டப் பணிகள் உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 75 மாவட்டங்களில் உள்ள மத்தியதரக் குடும்பங்கள் ஏற்கனவே 1 லட்சம் வீடுகளைக் கட்ட அனுமதி பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் 1 லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அரசு சுமார் 2.30 லட்சம் கோடி ரூபாய் செலவிடும். இந்த அவாஸ் யோஜனாவில், மத்தியதரக் குடும்பங்களை வருமானத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வீடு கட்டும் பணி நடைபெறும்.
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் ரூ.6 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் கிடைக்கும். ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.6 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் கிடைக்கும்.
அதேபோல், ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 4% வட்டி மானியம் கிடைக்கும். ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 3% வட்டி மானியம் கிடைக்கும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 18 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? , pmaymis.gov.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் லாகின் செய்து சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்ய வேண்டும். குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது benefits under other 3 components என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர், உங்கள் ஆதார் விவரம், வங்கிக் கணக்கு, பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி, குடும்பத் தலைவரின் பெயர், வீட்டின் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் பொதுச் சேவை மையத்திற்குச் சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.