fbpx

குட் நியூஸ்..!! வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் வாடகைக்கு தங்கிக் கொள்ளலாம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காவல்துறையினர் தங்கிக் கொள்ளலாம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தங்குவதற்கு சுமார் 4,000 குடியிருப்புகள் தேவைப்பட்டது. ஆனால், காவலர் குடியிருப்புகளில் காலி வீடுகள் இல்லை.

இதையடுத்து, போலீஸாரின் நலன் கருத்தில் கொண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீசாருக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய காவல் ஆணையர் அருண் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் போலீஸார் குடியிருப்பதற்கு ஆவண செய்யும் வகையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோவை நகரங்களில் உள்ள போலீஸாருக்கான குடியிருப்பு தேவையை பூர்த்தி செய்வதற்கு சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மகாகவி பாரதி நகர், அயப்பாக்கம் மற்றும் கோவை கணபதி நகர் ஆகிய இடங்களில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் போலீஸார் குடியிருப்பதற்கு வகை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் சென்னையில் சுமார் 4,000 போலீஸார் பயனடைய உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட குட் நியூஸ்..!!

English Summary

Chief Minister M. Stalin has announced that police officers can stay in Housing Board apartments.

Chella

Next Post

கரீனா கபூர் ஒரு துரோகி..!! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வடிவமைப்பாளருடன் நெருக்கம்..!! கொந்தளித்த நெட்டிசன்கள்..!!

Wed Apr 30 , 2025
Actress Kareena Kapoor Khan's shocking meeting with Pakistani designer and friend Faraz Manan has come as a shock.

You May Like