fbpx

குட் நியூஸ்..!! டிவி, வாஷிங் மெஷின், செல்போன்களின் விலை குறைகிறது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ஆம் ஆண்டு துவங்கியிருக்கும் நிலையில், வீட்டு உபயோக பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பானது, பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 2017 ஜூலை 11ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு வாட், ஜிஎஸ்டி, சுங்க வரி என்று 17 விதமான வரிமுறைகள் அமலில் இருந்த நிலையில், அனைத்தையுமே ஜிஎஸ்டி என்று ஒரே வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதாவது, மாநிலங்களுக்கு தக்கபடிமாறும், பல்வேறு வரி விதிப்புகளை அகற்றிவிட்டு, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறை ஜிஎஸ்டியாக கொண்டுவரப்பட்டது.

இதனால், வரி விதிப்பு என்பது எளிதாக இருக்கும். வெளிப்படைத் தன்மையாக மாறிவிடும். எந்த பொருளுக்கு வரி விலக்கு இருக்கிறது? எந்த பொருளுக்கு வலி இல்லை? இதெல்லாம் எளிதில் மக்களுக்கு புரியும். அத்துடன், அரசின் வருமானமும் அதிகரிக்கும் என்பனவற்றை முன்னிறுத்தியே ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது. அதன்படி, வரிவிதிப்பில் 5%, 12%, 18%, 28% என்று மொத்தம் 4 வகையில் வரி விதிக்கப்படுகிறது. அதேபோல, தங்கத்துக்கு 3% வரி விதிக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி, மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி என 2 வகைகளில் வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 வருடங்கள் முடிந்து, இன்று ஜூலை 1ஆம் தேதி 7வது ஆண்டு துவங்கி உள்ளது. இந்த 7வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு என்னென்ன பயன் என்று விளக்கமளித்திருக்கிறார். “ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பு, வாடிக்கையாளர்கள், ஒரு பொருளுக்கு 31% வரி செலுத்த வேண்டியிருந்தது.. இப்போது அந்த வரிகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2018 ஏப்ரல் 1ம் தேதி அன்று ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.03 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஜிஎஸ்டி வரி முக்கிய பங்கு வகிக்கிறது. வரி சட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாதம்தோறும் ரூபாய் 1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூபாய் 1.87 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி வரி வசூலானது” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், 2017க்குப் பிறகு விலை குறைந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “மத்திய மற்றும் மாநில அரசுகளின் 17 வகையான வரிகள் மற்றும் 13 வகையான செஸ் வரிகளை ஒன்றிணைத்து 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குடிமக்களுக்கு வரி செலுத்தும் சுமை குறைந்தது மட்டுமல்லாமல், நாட்டில் பொருட்கள் வாங்கும் திறனும் உயர்ந்தது.

பொருட்கள் – முந்தைய வரி – இப்போதைய வரி

1. குளியல் அறை, சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சிங்க்குகள், வாஷ் பேசின்கள், கழிப்பறை பொருட்கள், இருக்கைகள் மற்றும் கவர்கள் (Baths, Sinks, Wash Basins, Bidets, Lavatory Pans, Seats and Covers, Flushing Cisterns and similar sanitary ware of plastics and other articles of plastic) 28% – 18%

2. தலைமுடி எண்ணெய், பற்பசை, சோப்பு – 27% – 18%

3. டிடெர்ஜெண்ட்டுகள் மற்றும் சலவை பவுடர்கள் – 28% – 18%

4. அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள்- 28% – 18%

5. டேபிள்வேர், கிச்சன்வேர், மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் – 18%-28% 12%

6. பென்சில், ஷார்ப்பனர்கள்- 18% – 12%

பொருட்கள் – முந்தைய வரி – இப்போதைய வரி

1. 27 இன்ச் வரையிலான டிவி – 31.3% – 18%

2. குளிர்சாதனப் பெட்டி- 31.3% – 18%

3. வாஷிங் மெஷின் – 31.3% – 18%

4. எலக்ட்ரிக்கல் பொருட்கள், மிக்சர், ஜூசர், வேக்கம் கிளீனர் இன்ன பிற – 31.3% – 18%

5. கீசர், ஃபேன், கூலர் – 31.3% – 18%

6. மொபைல் போன்கள் – 31.3% – 12%

7. மரச்சாமான்கள் – 25%- 31%, 18%

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதலன்..!! தூக்கில் தொங்கிய காதலி..!! வேதனையில் வாலிபரும் தற்கொலை..!!

Sat Jul 1 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் குரு பிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும், குரு பிரசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், குரு […]
ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதலன்..!! தூக்கில் தொங்கிய காதலி..!! வேதனையில் வாலிபரும் தற்கொலை..!!

You May Like