கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.
கடத்த சில மாதங்களாக அரிசியின் விலையானது கிலோவுக்கு ரூபாய் 10 முதல் 15 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், அரிசி போன்ற பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில்ம் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரது அதிகரித்துள்ளது.
கோடை விளைச்சல் சந்தைக்கு வர தொடங்கியுள்ளதால், தற்போது அரிசியின் விலை குறைய தொடங்கியுள்ளது. அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரிசியின் விலை குறைவு தற்போது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அழிக்க தொடங்கியது சுனாமி..!! இன்னும் அரை மணி நேரத்தில் தீவிரம்..!!