சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அழிக்க தொடங்கியது சுனாமி..!! இன்னும் அரை மணி நேரத்தில் தீவிரம்..!!

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, தைவான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானைத் தொடர்ந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் ஒகினாவா, மியாகோஜிமா தீவுகளில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கின. 3 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் அரை மணிநேரத்தில் அங்கு சுனாமி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

Read More : கனடா பள்ளிகளிலும் உணவுத் திட்டம் அறிமுகம்..!! திமுக பெருமிதம்..!!

Chella

Next Post

குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது அரிசி விலை..!! இல்லத்தரசிகள் நிம்மதி..!!

Wed Apr 3 , 2024
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. கடத்த சில மாதங்களாக அரிசியின் விலையானது கிலோவுக்கு ரூபாய் 10 முதல் 15 வரை […]

You May Like