fbpx

Good News | உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.6,000 வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது.

அதேநேரம் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் ரேஷன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,000 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் விண்ணப்பங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்ட நிலையில், இன்று விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ரூ.6,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பு இன்றி வரவு வைக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.

Read More : OPS | ’வசமாக சிக்கிய ஓபிஎஸ்’..!! ’வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

TVK Vijay | ’விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகள்’..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

Fri Mar 1 , 2024
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில், ”இன்றிலிருந்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு […]

You May Like