10-ம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் ஏப். 20-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்தது. இந்த தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் அசல் சான்றிதழ் வழங்கப்படும். தேர்ச்சி பெட்ரா மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரிசியார் மூலமாக அசல் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலியே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.