fbpx

குட் நியூஸ்..!! உரிமைத்தொகை குறித்து வெளியான சூப்பர் அறிவிப்பு..!! இம்மாதம் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.1,000 கிடைக்காதவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த நிலையில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே பணம் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேல்முறையீடு செய்த பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

ஜப்பான் நிலநடுக்கம்!… பலி எண்ணிக்கை உயர்வு!… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி!

Thu Jan 4 , 2024
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 73 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 7.5 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இஷிகாவாவின் மத்திய மாகாணத்தில் உள்ள நோட்டோ தீபகற்பத்தை உலுக்கியது, இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் கிழக்கு ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் நோட்டோ தீபகற்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஷிகாவா மாகாணத்தில் அதிக […]

You May Like