fbpx

குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழ்நாட்டில் பள்ளிகளின் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி எந்த தேதியில் பள்ளி திறப்பு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கோடை விடுமுறையில் பாடம் நடத்துவதா..? தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!

Fri May 26 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்றது. 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கடந்த 29ஆம் தேதி முதல் 1-9ஆம் வகுப்பு […]

You May Like