கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தாமோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு, வாரியம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, ரூ.1,000 முதல் ரூ.12,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், தொழிலாளர்களின் குழந்தைகள் புத்தகம் வாங்குவதற்கு உதவித்தொகை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தான், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ. அன்பரசன் அறிவித்துள்ளார். தொழிலாளர்களின் குழந்தைகள் செவிலியர் படிப்பு படிக்க உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.