fbpx

குட் நியூஸ்..!! அதிரடியாக குறைகிறது மின் கட்டணம்..? தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்த முக்கிய முடிவு..!!

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு இருந்து வருகிறது. இதற்கு வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2022இல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதில், முதல்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ஆகவும், மாதம் நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 எனவும் தனி மின்கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியது. இந்த மின்கட்டண உயர்வால் சொந்த குடியிருப்புகள், தனிவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில், மீண்டும் கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மறுபடியும் பொது சேவை பிரிவுக்கான மின் கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 எனவும், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.102 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மின் கட்டணத்தை குறைக்க தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையின் படி பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக 10-க்கும் குறைவான வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையே பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என்றனர்.

Chella

Next Post

ஆபாச வீடியோ படப்பிடிப்பு..!! அதிர்ந்து போன அதிகாரிகள்..!! சொகுசு படகில் நடந்த பயங்கரம்..!!

Sun Sep 17 , 2023
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் நன்டூகெட் என்ற குட்டி தீவு அமைந்துள்ளது. இங்கு அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் அங்கிருந்த சொகுசு படகில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்தனர். அதில், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், வார இறுதி பார்ட்டிக்கு பின்னர் ஆபாச படங்கள் இங்கு […]

You May Like