கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். மேலும், இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு இன்று (டிசம்பர் 26) தேர் திருவிழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து செல்வார்கள். இந்த திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 26) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 20ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.