சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, தீபாவளியன்று ரூ.59,640 என்ற புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்திருந்த நிலையில் பின்னர் குறைவதும், மீண்டும் உயர்வதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தும், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் நேற்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூ. 7,090-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 56,720-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More : BEL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.90,000..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!