fbpx

குட்நியூஸ்!… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை!… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 20 நாட்களுக்கு பிறகு இன்று ரூ.39.50 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மாதந்தோறும் 1ஆம் தேதி விலை மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் ரூ.1,968.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியான இன்று சிலிண்டருக்கு ரூ.39.50 குறைந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kokila

Next Post

இவர்களுக்கு தலா ரூ.12500 நிவாரணம்!… தமிழக அரசு திட்டம்!

Fri Dec 22 , 2023
எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12500 நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்தது. அது மழைநீருடன் கலந்து குடியிருப்புகளில் வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து விசாரணை செய்தது. நீதித்துறை […]

You May Like