fbpx

இந்த 4 பிரபலமான செயலிகளை தடை செய்த கூகுள்.. நீங்களும் உடனே டெலிட் பண்ணுங்க..

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 4 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன, அவை மொத்தம் 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயலிகள் ஆபத்தான தீம்பொருளைக் கொண்டுள்ளதால், பயனருக்குத் தெரியாமலேயே விலையுயர்ந்த சந்தாக்களுக்குப் பதிவுசெய்து அவர்களின் பணத்தைத் திருடலாம். எனவே பயனர்கள் உடனடியாக இந்த செயலிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த 4 பயன்பாடுகளிலும் தீம்பொருள் இருப்பதை முதலில் பாதுகாப்பு நிறுவனமான ப்ரேடியோ கண்டுபிடித்துள்ளது. ஜோக்கர் மால்வேரை உட்பொதித்து டிராப்பர்களாக செயல்படும் 4 புதிய தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்களை ப்ரேடியோ கண்டறிந்துள்ளது..

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள்

  • Smart SMS Messages,
  • Blood Pressure Monitor
  • Voice Languages Translator
  • Quick Text SMS.

ஜோக்கர் என்பது ஒரு Fleecewares ஆகும்.. அதாவது அதிகப்படியான சந்தாக் கட்டணங்களைக் கொண்ட தீம்பொருள் வகையாகும். இந்தப் பயன்பாடுகள் சந்தாவை எப்படி ரத்து செய்வது என்று தெரியாத பயனர்களிடம் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான செயலிகளில் இந்த மால்வேர் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

மேலும் தடை செய்யப்பட்ட Smart SMS Messages, Blood Pressure Monitor ஆகிய செயலிகள் மிகவும் ஆபத்தானவை, அவை ஒரு முறை கடவுச்சொற்களை (OTPs) இடைமறிப்பதன் மூலம் இரண்டு-காரணி அங்கீகாரத்தைத் தவிர்க்கலாம். இதனால் அவை மற்ற தீங்கிழைக்கும் செயலிகளை தொலைபேசியில் நிறுவி, பணத்தை திருட முயற்ச்கிக்கின்றன.. என்வே இந்த செயலிகள் இனி Google இன் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், உங்கள் சாதனத்தில் அவை இருந்தால், உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்று பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பின் விசாரணை..! - சென்னை உயர்நீதிமன்றம்

Wed Jul 13 , 2022
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி கோரி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதியன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். […]
’சறுக்கும் ஓபிஎஸ்... சர்கஸ் காட்டும் ஈபிஎஸ்’..! அதிமுக அலுவலக வழக்கில் அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

You May Like