fbpx

அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பின் விசாரணை..! – சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி கோரி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதியன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ஆம் தேதி ஆஜராகி விளக்கம் தரும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரியும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் வெளியேற்றம் - 144 தடை உத்தரவு | Section  144 implemented and sealed AIADMK office – News18 Tamil

முன்னதாக நேற்று, இரு தரப்பிலும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இன்று வழக்கம்போல், நீதிபதி சதீஷ்குமார் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். ஆனால், இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது, மனுவிற்கு எண் இடும் நடைமுறைகளும் முடிந்துவிட்டன. எனவே, அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்று முறையீடு செய்தார்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில்  முறையீடு | AIADMK mentioning in High Court seeking removal of seal placed  at AIADMK office - hindutamil.in

அப்போது நீதிபதி, “இது எம்எல்ஏ தாக்கல் செய்துள்ள வழக்கு என்பதால், இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று அதற்கான நடைமுறைகளை பின்பற்றி, இரண்டு மனுக்களும் முறையாக விசாரணைக்குப் பட்டியலிடப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

#Breaking : இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. போராட்டம் தொடர்வதால் பிரதமர் ரணில் உத்தரவு..

Wed Jul 13 , 2022
வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் […]

You May Like