கூகுள் குரோம் பயன்படுத்துவோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட பதிவுகளில் பல பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்பியூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு (CERT-In) சமீபத்தில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், பயனாளர்களின் முக்கிய தகவல்களைச் சமரசம் செய்யும் வகையில் குரோம்களில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஃபிஷிங் தாக்குதல்கள், டேட்டா பிரீச், வைரஸ் அட்டாக் கூட நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குரோம்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருப்பதும், பாதுகாப்பாக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
கூகுள் குரோமில் பல பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன.. இதன் மூலம் கணினியின் ஒட்டுமொத்த கண்டிரோலும் கூட ஹேக்கர்களிடம் செல்லும் அ்பாயம் இருக்கிறது. குரோமில் ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பிரச்சினை இல்லை.. பல இடங்களில் இந்த சிக்கல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. prompts, Web Payments API, SwiftShader, Video என பல்வேறு இடங்களிலும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லினக்ஸ் மற்றும் ஆப்பிள் சிஸ்டத்தில் கூகுள் கிரோமின் 115.0.5790.170 வரையிலான பதிப்புகளிலும், விண்டோஸில் 115.0.5790.170/.171 வரையிலான பதிப்புகளிலும் இந்தப் பிரச்சினை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிரச்சினையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்: நமது சிஸ்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக குரோம்களை புதிய சாப்ட்வேருக்கு அப்டேட் செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்தப் பிரச்சினைகளைக் களைந்து கூகுள் புதிய க்ரோம் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதை நாம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கூகுள் குரோமில் மேலே வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும். அங்கு ஹெல்ப்> கூகுள் குரோம் உள்ளே சென்று அங்கு அப்டேட் செய்யவும். இப்படிச் செய்தால் குரோம் தானாக அப்டேட் ஆகிவிடும். இப்படிச் செய்யும் போது கூகுள் குரோம் தானாக ரிஸ்ட்ராட் ஆகி. அப்டேட் ஆகிவிடும். இது தவிர பொதுவாகவே ஹேக்கிங் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க நாம் சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
தவிர்க்கும் வழிமுறைகள்: நாம் செல்லும் இணையதளங்கள் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு லிங்கை க்ளிக் செய்யும் முன்பும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு டவுட் வந்தால் அந்த தளத்திற்கே செல்லாமல் இருப்பது நல்லது. வங்கி, சமூக வலைத்தளம் என எதுவாக இருந்தாலும் மிகவும் வலிமையான பாஸ்வேர்ட்களை பயன்படுத்தவும். ஆன்லைன் கணக்குகளுக்கு two-factor authenticationஐ எப்போதும் ஆனில் வைத்திருக்கவும்.. சமூக வலைத்தளங்களில் பகரும் தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. அனைத்தையும் விட இரண்டு முக்கியமானது இருக்கிறது. ஒன்று உங்கள் கணினியை முழுமையாக அப்டேட் செய்து வைத்திருங்கள். மேலும், வைரஸ்களில் இருந்து காக்க வலுவான ஆன்டி வைரஸை பயன்படுத்தவும்.