fbpx

Google Chrome பயனர்கள் கவனத்திற்கு.. சைபர் தாக்குதல் குறித்து மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை..

கூகுள் குரோம் பிரவுசர் பயனர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

கூகுள் குரோம் என்பது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் அணுகுகிறார்கள்.. குரோம் மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய பிரவுசர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. இந்நிலையில் இணைய தாக்குதல்களில் இருந்து பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது… பயனர்கள் தங்கள் Chrome பிரவுசரின் சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்யுமாறு கூகுள் பரிந்துரைத்தாலும், அந்த அப்டேட்டில் சைபர் கிரைமினல்களால் பயன்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இந்த நிலையில் மத்திய அரசு கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.. அதாவது கூகுள் குரோம் பதிப்பில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.. இது சைபர் குற்றவாளிகள், எங்கிருந்து வேண்டுமானாலும், கணினியை ஹேக் செய்யவும், இலக்கு வைக்கப்பட்ட கணினியில் முக்கியமான தகவல்களை அணுகவும் அனுமதிக்கும்.

Apple Mac மற்றும் Linux க்கு 109.0.5414.119 க்கு முந்தைய Google Chrome பதிப்பையும், Microsoft Windowsக்கான 109.0.5414.119/120க்கு முந்தைய பதிப்புகளில் இந்த குறைபாடுகள் உள்ளன.. எனவே எந்தவொரு மோசடியையும் தவிர்க்க, நீங்கள் Chrome உலாவியின் சமீபத்திய பதிப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என்று Google விரும்புகிறது.

Google Chrome பிரவுசரை எவ்வாறு புதுப்பிப்பது..?

  • Google Chrome பிரவுசரை திறக்கவும்.
  • மேல் வலது மூலையில் உள்ள ‘மூன்று-புள்ளி’ ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • மெனுவிலிருந்து, Settings என்பதை கிளிக் செய்யவும்.
  • பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள About Chrome விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • Update என்ற விருப்பம் கிடைத்தால், அதை கிளிக் செய்யவும்.
  • பிரவுசரை மீண்டும் துவக்கவும்.

Maha

Next Post

மீனவர்களே இன்று முதல் தடை..!! புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Jan 31 , 2023
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 380 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. அது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி […]

You May Like