fbpx

சந்திரயான்-3 வெற்றி…! அனிமேஷன் டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள் நிறுவனம்…!

சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியதை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் அனிமேஷன் டூடுல் வெளியிட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் சாதனையை பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சந்திரயான் -3 இன் அங்கீகரிக்கப்பட்ட செலவு ரூ.250 கோடி ஆகும். இந்தியாவின் முந்தைய முயற்சியான சந்திரயான்-2, 98% வெற்றியை அடைந்தது, இது திட்டத்தின் பெரும்பாலான நோக்கங்களை நிறைவேற்றியது, இருப்பினும் லேண்டர் தொகுதியின் கடைசி கட்ட செயல்திறனில் சில எதிர்பாராத மாறுபாடுகள் சந்திரயான் -2 தரையிறங்கும் போது அதிக வேகத்திற்கு வழிவகுத்தன.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், சந்திரயான் -3 இல் அனைத்து வகையான அவசரங்களையும் இஸ்ரோ திட்டமிட்டது. இது தென் துருவத்தில் சரியான தரையிறக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த வெற்றியை தொடரும் கொண்டாடிய வரும் நிலையில் கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 24 அன்று தனது மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான் -3 இல் இந்தியாவின் வெற்றியை சிறப்பு செய்யும் விதமாக அனிமேஷன் டூடுலுடன் கொண்டாடியது.

Vignesh

Next Post

69வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 முழு பட்டியல்… ராக்கெட்ரி முதல் காஷ்மீர் பைல்ஸ் வரை…

Fri Aug 25 , 2023
2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் […]

You May Like