fbpx

மீண்டும் அதிரடி முடிவெடுத்த கூகுள் நிறுவனம்..!! இனி இதெல்லாம் கிடையாது..!! கலக்கத்தில் ஊழியர்கள்..!!

கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துள்ள முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். உக்ரைன் போர், கொரோனா தொற்று ஆகிய காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தனர். இந்த பட்டியலில் கூகுள் நிறுவனம் இடம்பெற்றது. அதன்படி, கடந்த ஜனவரி 3ஆம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலவை குறைக்கும் திட்டத்தில் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை அடுத்து பணியாளர்களுக்கான பல்வேறு சேவைகளை கைவிடுவது என்று முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி ஊழியர்களுக்கு பணியின் போது மசாஜ் வழங்குவது, உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதற்கான வகுப்புகள், பழுதடைந்த லேப் டாப்புகளுக்கு பதிலாக புதிதாக ஒன்றை மாற்றி தருவது, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Wed Apr 5 , 2023
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதனால், அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதியான இன்று, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால், தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது 11 மற்றும் […]

You May Like