ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில், கூகுள் தனது முதல் சில்லறை விற்பனைக் கடைகளை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிளைத் தொடர்ந்து, இப்போது கூகிள் நிறுவனமும் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் முதல் கடை திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனை கடைகள் தொடங்கப்படும் நாடு இந்தியா ஆகும்.
அதாவது, கூகுள் நிறுவனம், இந்தியாவை முக்கிய வளர்ச்சி சந்தையாக கருதுகிறது, இதற்காக அந்நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. தற்போது, கூகுளுக்கு அமெரிக்காவில் மட்டுமே ஐந்து சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, அவை Pixel தொலைபேசிகள், கடிகாரங்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற அதன் தயாரிப்புகளை விற்பனை செய்துவருகின்றன.
அதாவது, தனது தயாரிப்புகள் மூலம், கடந்த இரண்டு தசாப்தங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்க உதவிய ஆப்பிளின் சில்லறை விற்பனை அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூகுளின் நோக்கமாக உள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம், உலகளவில் 500க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. அந்தவகையில், கூகுள் நிறுவனம், தனது சில்லறை விற்பனை கடைகளை திறக்க டெல்லி அல்லது மும்பையை சுற்றியுள்ள இடங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது குறித்து இறுதி முடிவை எடுக்கக்கூடும். நிறுவனத்தின் ஒரு கடை சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் இருக்கும், அடுத்த ஆறு மாதங்களில் அது திறக்கப்படும். கூகுள் ஆரம்பத்தில் பெங்களூரில் ஒரு கடையைத் திறக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் இப்போது ஆப்பிள் போலவே டெல்லி மற்றும் மும்பையிலும் கடைகளைத் திறக்கும். நிறுவனம் டெல்லியைச் சுற்றியுள்ள குருகிராமைத் தேர்வு செய்யலாம். இங்கு பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களும், பல உலகளாவிய நிறுவனங்களின் கடைகளும் உள்ளன.
Readmore: உஷார்!. வாட்ஸ் அப்பில் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்!. ஏன் தெரியுமா?