இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் நமக்கு தலைமுடி கொட்டுதல், நரைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகிறது. அத்துடன் கண்கள் மற்றும் பற்களிலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும், இது ரத்த அழுத்தம் குறையவும் காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் படிப்படியாக சர்க்கரையின் அளவு குறையும். இதை கண்கூடாக பார்க்கலாம்.
இந்த நெல்லிக்காய் நீரை வாரத்தில் 3 முறைக் குடிப்பதால் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானப்பிரச்சினை போன்ற பிரச்சினைகள் வராது. நெல்லிக்காய் நீரை செய்வது எப்படி என பார்க்கலாம். அதற்கு பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்து மோர் அல்லது தண்ணீரில் கலந்து கொள்ளவும். அதன் பின் அதனை, வடிகட்டி வாரத்திற்கு 3 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி குடிக்கும் போது, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உடலில் சமநிலையில் இருக்கும். இதனால், உடல் சீராக செயல்படுவதுடன் எந்த வித தொந்திரவும் இல்லாமல் இருக்கும். மேலும், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு இந்த சாறு பெரிதும் கை கொடுக்கிறது.