fbpx

இனி அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம்!… தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!

அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறமாக மாற்ற உள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியில் பச்சை நிறத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின், பி.எஸ்.4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது. தற்போது, அதிகளவில் நீல நிற பஸ்கள் இயக்கத்தில் உள்ளன. இலவச பஸ் என அடையாளம் காண முன், பின் பாதி, பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுதும் பயன்படுத்த, 1,000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும், 500 ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. …இதனை தொடர்ந்து நீல நிறத்தில் உள்ள அரசுப் பேருந்துகளை மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறமாக மாற்ற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சென்னை, திருச்சி, கரூர் மற்றும் பெங்களூர் பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் மேற்கொள்ள உள்ளது. பேருந்துகளுக்கு நிறம் மட்டுமல்லாமல் பயணிகளின் வசதிக்காக இருக்கைகளும் விரிவாக அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

Kokila

Next Post

இன்றுமுதல் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!… தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Sun Jul 30 , 2023
2023-2024-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (ஐந்தரை ஆண்டுகள்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி : +2 ஆகும். இந்த படிப்புகளுக்கான, விண்ணப்பப் படிவங்களை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது […]

You May Like