fbpx

குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசு பெண் மருத்துவர்…! அதிரடி காட்டிய வருவாய்த்துறை அதிகாரிகள்…

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான பெண் மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நாகதேவி தம்பதியினர். சமீபத்தில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை விற்பனை செய்வதற்காக அந்த தம்பதியினரிடம் புரோக்கர் லோகாம்பாள் மூலம் பேரம் பேசப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 லட்ச ரூபாய் தருவதாகவும் புரோக்கர் லோகாம்பாள் கூறியுள்ளார். இதனை மறுத்த குழந்தையின் பெற்றோர் தினேஷ், இது குறித்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து புரோக்கர் லோகாம்பாளை பிடித்து காவல் துறை விசாரித்ததில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், ஏழ்மை நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தமப்தியினரிடம் இது போல அணுகி அவர்களிடம் பேரம் பேசி குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் குழந்தையை விற்பனை செய்யும் புரோக்கர் லோகாம்பாள் ஆகிய இருவரையும் திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும் குழந்தை விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொர்பு இருக்கிறது என கண்டறிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்செங்கோடு சேலம் சாலையில் பெண் மருத்துவர் அனுராதாவிற்கு சொந்தமான தனியார் கிளினிக் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த அரசு மருத்துவமனை அறை ஆகியவை வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

Kathir

Next Post

வாச்சாத்தி பாலியல் வழக்கு... மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி...! 6 வாரத்தில் சரணடைய உத்தரவு...!

Tue Oct 17 , 2023
வாச்சாத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். இக்கிராமத்தில் சுமார் 655 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், […]

You May Like