fbpx

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை.. உங்க ஸ்மார்ட்போனை உடனே செக் பண்ணுங்க..

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை பதில் அணி (CERT-In), கூகிள் குரோம் பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப் பிரௌசர் சேவையான கூகுள் குரோம் (Google Chrome Web Browser) சேவையை பயன்படுத்தும் அணைத்து மக்களுக்கும் இந்த அவசர எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை செய்தியை கவனிக்காமல் கூகுள் குரோம் பயன்படுத்தினால், கூகுள் குரோம் பயனர்கள் சில டிஜிட்டல் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டில் அதிக ஆபத்துள்ள பாதிப்புகள் இருப்பதாக இந்திய அரசாங்கம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணைய அச்சுறுத்தல்களைத் தடுக்க பயனர்கள் தங்கள் கணினிகளை உடனடியாக புதுப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய ஆலோசனைகளில் CERT-In ஆனது கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பல தீவிர பாதிப்புகளை எடுத்துரைத்தது. இந்த பாதிப்புகள் மில்லியன் கணக்கான சாதனங்களை சைபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட உதவுகிறது.

ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு அச்சுறுத்தல் : CERT-In ஆனது Android இல் உள்ள பல பாதிப்புகளை முன்னிலைப்படுத்தியது, இது கட்டமைப்பு, சிஸ்டம் மற்றும் MediaTek மற்றும் Qualcomm இன் துணைக் கூறுகள் போன்ற முக்கியமான கூறுகளை பாதிக்கிறது. இந்தச் சிக்கல்கள் ஆண்ட்ராய்டின் பல பதிப்புகளில் உள்ளன, குறிப்பாக ஆண்ட்ராய்டு 12, ஆண்ட்ராய்டு 12 எல், ஆண்ட்ராய்டு 13, ஆண்ட்ராய்டு 14, ஆண்ட்ராய்டு 15 சாதங்களை இந்த பாதிப்பு குறிவைக்கிரது.

Google Chrome க்கு அச்சுறுத்தல் : இந்த பாதிப்பு கூகுள் குரோம் மூலமாகவும் தனிப்பட்ட விவரங்களை திருட அனுமதிக்கிறது. அங்கீகரிக்கப்படாத லிங்க் அல்லது செயலியை நிறுவதன் மூலம் தனிப்பட்ட டேட்டாக்கள் திருடப்படுகின்றனர். எனவே தேவையற்ற செயலியை உங்கள் செல்போனில் நிறுவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

பயனர்கள் என்ன செய்ய வேண்டும் :

Google Chrome ஐப் புதுப்பிக்கவும் : Chrome இல் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய கூகுள் ஏற்கனவே பேட்ச்களை வெளியிட்டுள்ளது. நீங்கள் Chrome இன் சமீபத்திய பதிப்பை இயக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். தற்போதைய நிலையான பதிப்பு விண்டோஸ் மற்றும் மேக்கிற்கு 129.0.6668.100 மற்றும் லினக்ஸுக்கு 129.0.6668.89 ஆகும். புதுப்பிப்புகளைச் சரிபார்த்து சமீபத்திய பதிப்பை நிறுவ வேண்டும்.

பிசி (PC), டெஸ்க்டாப் (Desktop) மற்றும் லேப்டாப் (Laptop) பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

இதேபோல், பிசி பயனர்கள் கூகிள் குரோமைத் தொடங்கி, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து “Settings” என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, “About Chrome” என்பதற்குச் சென்று அப்டேட்களைச் சரிபார்த்து, கிடைக்கக்கூடிய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்து, பிறகு கூகுள் குரோமை க்ளோஸ் செய்து, மீண்டும் திறக்கவும். புதிய Google Chrome Update மூலம் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களை சுற்றியுள்ளவர்கள், மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் யாரும் கூகுள் குரோம் வெப் பிரௌசர் பயன்படுத்தினாலும், உடனே இந்த அப்டேட் குறித்த தகவலை தெரியப்படுத்தி, அவர்களையும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவுங்கள் மக்களே. இந்த தகவலை முடிந்த வரை மற்றவர்களுடன் பகிரும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Read more ; மழைக்காலம்.. மின் விபத்துக்களை தவிர்க்க இதையெல்லாம் செய்யாதீங்க..!! – மின்சார வாரியம் வார்னிங்க்

English Summary

Government has issued a high risk warning for these android users, check how you can save yourself from potential cyber attack.

Next Post

பீர் குடிக்கும் நபரா நீங்கள்..? பாட்டில் ஏன் பச்சை மற்றும் பழுப்பு நிறத்துல இருக்குன்னு தெரியுமா..?

Tue Oct 15 , 2024
Do you know why beer bottles are green or brown in color? You can see this in this news package.

You May Like