பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், 4 தென் மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 261 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பார்கள் என்றும், பாதிப்படைந்துள்ள மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மழையால் பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி அரசு மருத்துவமனை இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சரியாகும் வரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.