உதவிக்கு யாருமின்றி தனியாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நடுவீதியில் பிரசவித்த அவலம் அரங்கேறியுள்ளது.
திருப்பதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கருவுற்ற நிலையில் பெண் வந்துள்ளார். அவரை அனுமதிக்க மறுத்த நிர்வாகம் வெளியில் அனுப்பியுள்ளது. இதனால், வளாகத்தில் காத்திருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார்.
அங்கிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த போர்வையை திரை போன்று பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் தாயையும் சேயையும் ஸட்ரெச்சரில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் இதுபோன்று நடந்துகொண்ட அரசு மருத்துவமனைக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சாலையில் பிரசவிக்கும் நிலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஆதார் மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ அட்டை இல்லாததால் தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் இரட்டை குழந்தைகளை வீட்டில் பெற்றெடுத்த பெண் உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்தார். சிறிது நேரத்திலேயே இரட்டை ஆண்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.