fbpx

#Pension: 40 முதல் 70 வயதினருக்கு மாதம் ரூ.300, நீங்க 80 வயதை அடைந்தவுடன் ரூ.500 ஓய்வூதியம்…! இவர்களுக்கு மட்டும் தான்… முழு விவரம் இதோ….

மகளிர் நலன், மறுவாழ்வு, அதிகாரம் வழங்குதல், கல்வி, ஆதரவற்ற மகளிருக்கு வேலை வழங்குதல் போன்றவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஸ்வதார்க்ரே திட்டம்: இத்திட்டம், குடும்ப முரண்பாடு, குற்றம், வன்முறை, மனஅழுத்தம், சமூகப் புறக்கணிப்பு போன்ற கடினமான சூழல்களில் உள்ள மகளிருடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பாதிக்கப்பட்ட மகளிருக்கு, தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, மருத்துவம், பயிற்சி, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஸ்வதார்க்ரே திட்டத்தின்கீழ், பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்: இத்திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கு விதவை ஓய்வூதியத் திட்டம் அளிக்கப்படுகிறது. இது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழுள்ள ஒரு துணைத் திட்டமாகும். இந்த திட்டத்தில் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் 300 ரூபாயும், 80 வயதை அடைந்தவுடன் மாதம் 500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், தலை சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், கந்தல் பிடிப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், , கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், பிற தொழில்களில் மாத வருமானம் மாதம் ரூ. 15,000/ அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் 18-40 வயதுடைய நுழைவு வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Also Read: எல்லாரும் கவனம்… 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

Vignesh

Next Post

மக்களே ஜாக்கிரதை... வரும் 26-ம் தேதி வரை கனமழை பெய்யும்...! எந்தெந்த மாவட்டத்தில்...?

Sat Jul 23 , 2022
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் […]

You May Like