fbpx

கருணை அடிப்படையில் அரசு வேலை சலுகைதான் .. உரிமை கிடையாது…

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் அனுஸ்ரீ என்பவரது தந்தை அரசு பணியாளர். இவர் திருவாங்கூர் பகுதியில் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் 1995ல் தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்தார். இவரதுமனைவியும் கேரளா அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனால் மனைவிக்கு கருணை அடிப்படையில் அவரது வேலையை தரவில்லை. எனவே தந்தை இறந்து 14 ஆண்டுகள் கழித்து அணுஸ்ரீ கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். இவரது தாயாரும் அரசு வேலையில் உள்ளார். 14 ஆண்டுகள் கடந்த நிலையில் அணுஸ்ரீமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் கருணை அடிப்படையில் வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் , அரசு விதிகளின் படி இது பொருந்தாது என கருணை மனுவை மீண்டும் திருவாங்கூர் உரம் மற்றும் இரசாயன கழகம் நிராகரித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட செய்தார்.

இதை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் , உச்சநீதிமன்றம்அளித்த தீர்ப்பில் ’’ கருணை அடிப்படையிலான வேலை என்பது உரிய ஆதரவோ வாழ்வாதாரமோ இல்லாத நபர்களுக்கு அவர்களின் சூழல் கருதி வழங்கப்படுகின்றது. மனுதாரரின் தாயார் அரசு பணியில் உள்ளார். தந்தை இறந்து பல ஆண்டுகள் கழித்துவேலை கேட்பது அதன் நோக்கத்தை மீறுவது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பணி வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது செல்லத்தக்கதல்ல எனவும் தெரிவித்தனர்.

Next Post

அடுத்த அதிர்ச்சி..!! விராட் கோலியும் விலகல்..!! அவருக்கு பதில் இனி இவர்தான்..!!

Tue Oct 4 , 2022
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது. தொடரை இந்தியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றி பெற தென்னாப்பிரிக்கா அணி முனைப்புடன் உள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று 3-வது […]
அடுத்த அதிர்ச்சி..!! விராட் கோலியும் விலகல்..!! அவருக்கு பதில் இனி இவர்தான்..!!

You May Like