fbpx

கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…..! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு அடேங்கப்பா இவ்வளவு சம்பளமா…..?

பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் கீழ் சென்னையில் கடலோர மீன்பிடி கிராமங்களில் காலியாக இருக்கின்ற சாகரமித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
சென்னை கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மட்டும் தான் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில், ஒரு வருடத்திற்கு பணியாற்ற அழைக்கப்படுவார்கள்.

மீன் வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு இது முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேற்கண்ட ஏதாவது ஒரு படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதோடு சென்னை மாவட்ட மீனவர் கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அதேபோல 31 -1- 2023 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 35க்குள் இருக்க வேண்டும். நன்றாக தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் மாதாந்திர ஊக்க ஊதிய தொகையாக 15000 வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் 30-6 2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், எண் 77, சூரிய நாராயணா செட்டி தெரு, ராயபுரம் சென்னை 13 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில்..!! 4 மாவட்டங்கள்..!! இடியுடன் கூடிய மழை..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Fri Jun 23 , 2023
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. வழக்கமாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வெயில் பதிவாகும், ஆனால், இந்த முறை மதுரை, ஈரோடு, சென்னை என பரவலாக வெயில் 100 டிகிரியை கடந்து வீசியது. இதற்கிடையே, அக்னி நட்சத்திரம் […]

You May Like