fbpx

55000 பேருக்கு விரைவில் அரசு வேலை!… தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக அதிகரிப்பு! முதல்வர் ஸ்டாலின்!

நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு திமுக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. தியாகிகளுக்கு மணிமண்டபம், இலவச பஸ் பயணம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் 11 ஆயிரமாக உயர்த்தப்படும். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் அரசு வேளாண் கல்லூரிக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும்.

நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். மொழிப்பற்று மற்றும் இனப்பற்றுடன், நாட்டுப்பற்றையும் ஒத்த உணர்வுடன் கொண்டவர்கள் தமிழர்கள். இலவச பஸ் பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 ரூபாய் மிச்சம் செய்ய முடிகிறது. காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. வேற்றுமைகளை களைத்து ஒற்றுமையாக வாழ்வதே பலம். நாட்டில் பல வேற்றுமைகள் இருந்தாலும், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக கீழ் ஒற்றுமையாக வாழ்கிறோம். பரந்து விரிந்த இந்தியாவில், வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்கிறோம். அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோரத்துவ, சம தர்ம இந்தியா.

மகளிருக்கான இலவச பயண திட்டம் இனி விடியல் பயண திட்டம் என்று அழைக்கப்படும். தமிழகம் தான் விடுதலை போராட்டத்திற்கான விதையை விதைத்தது. சுமார் 2 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் போன்ற கொடூர தேர்வை அகற்ற முடியும்.

Kokila

Next Post

விரைவில் பிக்சல் 8 சீரிஸ் அறிமுகம்!… கூகுள் நிறுவனம் அறிவிப்பு!… சிறப்பம்சங்கள் இதோ!

Wed Aug 16 , 2023
பிக்சல் 7 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பிக்சல் 8 மாடல் போனை களமிறக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீமியம் செக்மென்டில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் கூகுள் பிக்சல் நிறுவனம், சமீபத்தில் பிக்சல் 7 மாடல் மூலம் வரவேற்பை பெற்றநிலையில் தனது அடுத்தபடைப்பான பிக்சல் 8 போனை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிக்சல் 8 […]

You May Like