fbpx

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் தலைமையில் குழு…!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும்.

சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திருஅமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்

Vignesh

Next Post

இணையதள விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்……! வங்கி கணக்கிலிருந்து 36 லட்சம் ரூபாய் காணாமல் போனது….,!

Sun Jun 11 , 2023
ஹைதராபாத்தில் அம்பேர் பேட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தன்னுடைய தாத்தாவின் கைபேசியில் பிரீ பையர் கேம் டவுன்லோட் செய்து விளையாடி வந்தார். அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கேமை தொலைபேசிகளில் இலவசமாக விளையாடலாம். அவர் இந்த கேமில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிய போது கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை செலவழிக்க தொடங்கினார், முதலில் 1500ல் தொடங்கிய இந்த செலவு 10ம் வரையில் சென்றுள்ளது. இப்படியே […]

You May Like