fbpx

ஆடு, மாடு, கோழி, வளர்க்க ரூ.15 ஆயிரம் மானியம்..!! – தமிழக அரசு அறிவிப்பு

இன்றைய காலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தொழிலை பலரும் ஆர்வமாக செய்து வருகிறார்கள். விவசாயிகள் உள்பட பலரும் கூடுதல் வருமானத்திற்காக இதுபோன்ற வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகிறார்கள். நம் நாட்டிலுள்ள விளிம்புநிலை விசாயிகளின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள ஆடு, மாடுகள் முக்கிய பங்காற்றுகிறது. இவை இறைச்சிக்காவும், பாலிற்காகவும் வளர்க்கப்படுகிறது. இதற்கான தேவை உலகம் முழுவதும் அதிகமாக இருக்கிறது.

2022 – 2023 ஆம் ஆண்டு நிதியாண்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் போன்றவை வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 15 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஊடு பயிர் அல்லது வரப்பு பயிர் சாகுபடிக்கு ரூ. 5 ஆயிரம், கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ. 15 ஆயிரம், 10 ஆடுகள் வாங்குவதற்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் 10 கோழிகள் வாங்க ரூ 3000, இரு தேனீ பெட்டிகள் வாங்க ரூ 3,200, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 10 சென்ட் பரப்பில் தீவன பயிர் சாகுபடிக்கு ரூ 800 என 50 சதவீத மானியமாக ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; தவணை முறை வீடு விற்பனை நிறுத்தம்..!! –  தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி

English Summary

Government of Tamil Nadu provides subsidy of Rs.15 thousand for purchase of goats. It seems that people related to agricultural industry will benefit from this

Next Post

இந்தியில் கலைஞர் நாணயம்.. ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்

Mon Aug 19 , 2024
Chief Minister Stalin has explained why Hindi words were printed on the artist coin and why Rahul Gandhi was not invited to the coin release ceremony.

You May Like