fbpx

தமிழக அரசு சார்பில் கறவை மாடுகளை வாங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம்…! அமைச்சர் குட் நியூஸ்…!

2 லட்சம் பேருக்கு கறவை மாடுகளை வாங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; பால் உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய கடன், வங்கிக் கடன் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் 15 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கால்நடை வாங்குவதற்காகவும் அதை பராமரிப்பதற்காகவும் ஏறத்தாழ ரூ.200 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

மழையால் பால் விற்பனை பாதிக்காது. பொதுமக்களுக்கு 100% தட்டுப்பாடுயின்றி பால் விற்கப்படும். சென்னையில் 70,000 லிட்டர் பால் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி கொள்முதல் விற்பனையை பெருக்கும் முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு கறவை மாடுகளை வாங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம்.

மேலும், கடன் உதவி கேட்டு 1.10 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளது. அதை பரிசீலனை செய்து விரைவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படவில்லை. மற்றொரு தயாரிப்பை அறிமுகம் செய்து அது பசும்பால் தரத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். படித்து வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் யாராக இருந்தாலும் புதிதாக ஆவின் விற்பனை மையங்களை தொடங்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இவர்களுக்கு கடன் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

Vignesh

Next Post

"குடிக்க காசு கேட்டா தரமாட்டியா."? ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.! மனைவிக்கு நேர்ந்த துயரம்.!

Sun Dec 3 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக தப்பியோடிய கணவன் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் கௌரவ் கௌதம். இவரது மனைவியின் பெயர் கௌரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌதம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று […]

You May Like