fbpx

தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவு…!

தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் இது குறித்த ஒரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், FL 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,FL 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், FL 3(ஏ) மற்றும் FL 3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவுகளை மீறி மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

English Summary

Government order to close liquor shops across Tamil Nadu tomorrow

Vignesh

Next Post

வந்தாச்சு புதிய செயலி... வெள்ள பாதிப்பு குறித்து இனி முன்கூட்டியே அலர்ட்...! எப்படி டவுன்லோட் செய்வது...?

Wed Aug 14 , 2024
A new app has arrived... early warning about flood damage

You May Like