fbpx

கந்துவட்டியால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்..! 6 பேர் கைது..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45), இவர் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாளும் (43), சுக்கிவார்பட்டி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தவள்ளி (28) என்ற மகளும், ஆதித்யா(13) என்ற மகனும் இருந்தனர். தனது தந்தை வீட்டில் வசித்து வந்த ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சசிகா என்ற 3 மாத கைக்குழந்தை இருந்தது.

கடந்த 23ஆம் தேதி, காலை வெகு நேரமாகியும் லிங்கத்தின் வீட்டுக் கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் அவர்களது மகன், மகள், பேத்தி என ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்த போலீஸார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 5 பேரின் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் லிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆசிரியை பழனியம்மாள் உள்ளிட்ட ஐந்து பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரமேஷ் குமார், மணிவண்ணன், முருகன், கிருஷ்ணன், அருண்குமார், முருகன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், கந்து வட்டி தடை விதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

English Summary

In sivakasi Government school teachers committed suicide with their families..! 6 people arrested..!

Kathir

Next Post

உங்கள் காரில் கூலிங் அதிகமாக வரவில்லையா? அப்போ காரணம் இதுதான்!!

Sat Jun 1 , 2024
காரில் உள்ள ஏசியில் அதிகளவிலான கூலிங் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஏன் என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தாண்டின் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும் கூட, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைபாடில்லை. வீட்டில் இருக்கும்போது […]

You May Like