உங்கள் காரில் கூலிங் அதிகமாக வரவில்லையா? அப்போ காரணம் இதுதான்!!

காரில் உள்ள ஏசியில் அதிகளவிலான கூலிங் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஏன் என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தாண்டின் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும் கூட, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைபாடில்லை. வீட்டில் இருக்கும்போது ஏசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல் நாம் வெளியில் செல்லும் போதும் ஏசி அவசியம். குறிப்பாக காரில் செல்லும் போது அதில் இருக்கும் ஏர் கண்டிஷனரை ஆன் செய்தால்தான் நிம்மதி பெருமூச்சு வரும். இருப்பினும், அதிக வெப்பம் காரணமாக காரில் உள்ள ஏசி அமைப்புகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வெப்பமான காலநிலைகளில் உங்கள் காரில் உள்ள ஏசி குளிர்ச்சியடையாமல் இருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஏர் கண்டிஷனரில் கசிவு:

காரில் அதிக கூலிங் வரமால் இருப்பதற்கு முக்கிய காரணம் ஏர் கண்டிஷனர் கசிவாக இருக்கும். காரின் ஏசி அமைப்புக்கு வெப்பநிலையைக் குறைக்க ஃப்ரீயான் தேவைப்படுகிறது. காரில் இந்த ஃப்ரீயான் கசிவு ஏற்படும் போதெல்லாம் ஏசியின் கூலிங் குறைகிறது. மேலும் உங்கள் காரின் ஏசி குளிர்ந்த காற்றை வீசவில்லை என்பதற்கான மற்றொரு காரணம் கார் ஒரு ஹைப்ரிட் ஆகும். ஏசி சிஸ்டத்திற்கு இன்ஜின் பவர் தேவை. அதாவது உங்கள் கார் EV பயன்முறையில் இருந்தால், என்ஜின் இயங்குவதை நிறுத்திவிடும் மற்றும் ஏர் கண்டிஷனரை இயக்காது.

ஏசி கம்ப்ரசர் பழுது:

ஏசி கம்ப்ரசர் எந்த ஒரு ஏசிக்கும் முக்கியமானது. இவை தான் கூலிங்கை முடிவு செய்கின்றன. பொதுவாக இவை விலையுயர்ந்த பொருளாகும். எனவே காரில் உள்ள இந்த பகுதி பழுதடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ காரில் ஏசி சரியாக வேலை செய்யாது. இந்த சேதத்திற்கு எங்கையாவது இடித்து இருந்தாலோ அல்லது அதிக வெப்பம் காரணமாகவோ ஏற்படலாம். மேலும் டேஷ்போர்டிற்குள் அமைந்துள்ள ஏசி எவாப்ரேட்டர் காற்றை குளிர்விக்கும். இதில் பாதிப்பு இருந்தாலும் ஏசி சரியாக வேலை செய்யாது.

ப்ளோவர் பாதிப்பால் ஏசி இயங்காது:

ப்ளோவர் விசிறிகளைப் பயன்படுத்தி ஏசி கேபின் முழுவதும் காற்றைச் சுழற்றுகிறது. ஒருவேளை ப்ளோவர் வேலை செய்யவில்லை என்றால், ஏசி மோட்டார் செயலிழப்பு ஏற்பட்டு காரில் ஏசி சரியாக இயங்காது. மேலும் கார் வாங்கி நீண்ட நாட்கள் அகி இருந்தால் இதனை மாற்றுவது நல்லது. அதே போல காரில் எங்காவது ஏசி லீக்கேஜ் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். எனவே கசிவுகளைக் கண்டறிந்து சரிசெய்வது மிகவும் நல்லது. மேலும், ஏசி மின்தேக்கியானது ரேடியேட்டர் வழியாக செல்லும் போது காற்றை குளிர்விக்கிறது. இவை காரின் முன்புறத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் மின்தேக்கியை மாற்றுவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். எனவே இதனை அவ்வப்போது பார்த்துக்கொள்வது செலவை குறைக்கும் மற்றும் காரில் ஏசி நன்றாக வேலை செய்யும்.

Read More: தலித் தலைவரின் பிரதமர் கனவை சிதைத்த, இந்தியாவின் முதல் பாலியல் ஊழல்..!!

Baskar

Next Post

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!! சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள சூப்பரான சிகிச்சை முறை!!

Sat Jun 1 , 2024
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை முழுவதுமாக குணப்படுத்தி மருத்துவ உலகில் சாதனை புரிந்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை, சீன அறிவியல் கழகத்தின் மாலிக்கியூல் செல் சையின்ஸ் பிரிவின் சிறப்பு மையம் மற்றும் ரெஞ்சி மருத்துவமனையை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சவுத் சீன மார்னிங் போஸ்ட் செய்தித் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை […]

You May Like