கரூர் மாவட்ட பகுதியில் நாகம்பள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் , உடைகள் அணியாமல் சுற்றி கொண்டு யாசகம் எடுத்து உணவருந்தி கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள அரளிச் செடியில் நடுவில் படுத்திருந்தார்.
இந்த நிலையில் இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அரசு பேருந்து பணியில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததுள்ளார். மேலும் இந்த நபருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை.
சென்ற நான்கு மாதங்களாக சித்தர் என்றும் கூறிகொண்டு பொதுமக்களிடம் ஏமாற்றுவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரவி வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தகரக் கொட்டகையின் அருகே குடிசை போட்டு அமர வைத்து ஆசிவழங்குவதாக கூறியுள்ளார்.
மேலும் அவ்வாறு ஆசி வாங்க வரும் பொது மக்களிடம் இருந்து சிலர் உண்டியலினை வைத்து சுய லாபத்திற்காக பணத்தை வசூல் செய்து வந்துள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பிறகு 15 நாள் சிகிச்சை முடிந்து அவர் குணமானதும் தேனி மாவட்ட பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.