ஏழை நடுத்தர குடும்பங்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பெட்ரோல் விலை. நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை மனதில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியை குறைக்க தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் , பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, மத்திய அரசு அதிர்ச்சியை அளித்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.