fbpx

இந்திய-சீனா எல்லையில் உள்ள கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்பு…!

இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. லே பகுதியிலிருந்து 211 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடாக்கின் கர்சோக் கிராம மக்களுடன் உரையாடிய போது இவ்வாறு கூறினார்.

உள்ளூர் கிராம மக்களுக்கு சிறந்த டிஜிட்டல் இணைப்பு, சாலை இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

Vignesh

Next Post

காதலனுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி..!! வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த போலி போலீஸ்..!!

Sat Jul 15 , 2023
டெல்லி மாநிலம் பிரசாந்த் விகார் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் கடந்த ஜூலை 7ஆம் தேதி காரில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்த தருணத்தை கவனித்த ஒரு நபர், ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர், இவர்களது காரை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். காதலன் கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். […]

You May Like